எழுச்சி

#விவசாயம்

    விவசாயம் ஏதோ என்று எண்ணிவிட வேண்டாம். உனக்கான உயிர் அங்கேதான் பயிரிடபடுகிறது. விவசாயமே உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்.  “இயற்கை வழி திரும்புவோம் புதிய புரட்சி செய்வோம்”. நாம் உயிர் வாழ தன் உயிரைப் பொருட்டுபடுத்தாமல் அள்ளும்  பகலும்  உழைத்து தன் இரத்தத்தை வியர்வையாக சிந்தி இவ்வியர்வையின் ஒவ்வொரு மணி துளியும்,  நாம் சாப்பிடும் நெல்மணியாக மாற உழைக்கும் நம் விவசாயிகளின் தேவைகளுக்காக, அவர்கள் நடத்தும் இந்த அமைதி போராட்டத்தில் நாமும் துணை நின்று வெற்றி பெற செய்வோம். விவசாயத்தை மீட்டு எடுப்போம்!!!!! விவசாயத்தை மதிப்போம்!!!! விவசாயிகளின் உணர்வுகளுக்கு குரல் கொடுப்போம்!!!!

#ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு என்கிற தமிழரின் பண்பாட்டு உரிமையை மீட்க உலகம் முழுவதும்  தமிழ் இளைஞர்கள், மாணவர்கள், பெரியோர்கள்  இடைவிடாத “சத்தியாகிரகம்”  என்றழைக்கப்பட்ட அறப்போரை நடத்தினர். பின்னர்  உலகமே வியக்கும் அளவுக்கு தமிழர்களின் எழுச்சிமிக்க இச்செயலானது வெற்றி பெற்றது. இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வது போல தமிழன் என்பதிலும் பெருமை  கொள்கிறோம்.