திராவிடர்களின் அடையாளம்

விளையாட்டு

ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள்  மத்தியில் உருவாக்கும்.  அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன.

பண்பாடு

தமிழில் மருத்துவக் கல்வியைக் கற்றல் தொடர் துறைச்சார் கல்விக்கு தடையாக இருக்கும் எனப்படுகிறது. அதி உயர் மருத்துவ தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருப்பதாலும், அவற்றை தமிழில் மொழி பெயர்தற்கு வளங்கள் போதாமையாலும் தமிழ்வழி மருத்துவக் கல்வி தடையாக இருக்கும் எனப்படுகிறது.

பாரம்பரிய கலைகள்

கலைகளின் தாயகமாய் திகழ்வது தமிழ்நாடு. அப்படி கலாசாரத்திலும், மரபிலும் முன்னோடியாக திகழும் தமிழகத்திற்கு என்று எப்போதுமே ஒரு தனி அடையாளம் உண்டு. தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் மழுங்கடிக்கப்பட்டு வருதல் மிகவும் மனவேதனையை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழர்களின் கலாசாரத்துடன் கூடிய பாரம்பரிய கலைகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

கோலம்

கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். அதனால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராண வாயு, அதாவது சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.