திருக்குறள்

“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”

கடவுள் வாழ்த்து

தெய்வப்புலவரான திருவள்ளுவர் தம் நூலாகியத் திருக்குறளில், இறைவன் ஒருவனே அவனே அனைத்திற்கும் மேலானவன், எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பு இறைவனை வணங்க வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு முதலாவதாக, “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரத்தை இயற்றியுள்ளார்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு

பொருள் : தமிழ் எழுத்துகளுக்குள் முதன்மை அ என்பது போல, உலகத்திற்கு முதன்மையானவர் கடவுள்.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

    நற்றாள் தொழாஅர் எனின்

பொருள் : தன்னை விட பண்பில் மூத்தப் பெரியோர்களை மதியாதவர், படித்தும் என்னப் பயன்.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார்

பொருள் : மலர் போன்ற இறைவனைப் பின்பற்றுவோர்க்கு, நற்குணம் பெற்று சிறப்பாய் வாழ்வர்.

4. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்க

    யாண்டும் இடும்பை இல

பொருள் : விருப்பு வெறுப்பற்றுத் திகழ்கின்றப் பெரியோர்களை பின்பற்றி நடப்பதால், துன்பம் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பொருள் : இறைவனது புகழை விரும்பி எப்போதும் அன்பு  காட்டுபவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

    நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள் : ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட இறைவனின் ஒழுக்கநெறியைப் பின்பற்றுவர், புகழ்வாழ்வு பெறுவர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    மனக்கவலை மாற்றல் அரிது

பொருள் : இணையில்லாத கடவுளின்  நெறியைப் பின்பற்றுபவரை தவிர, மற்றவரின் மனக்கவலையை மாற்ற இயலாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    பிறவாழி நீந்தல் அரிது

பொருள் : சான்றோரின் வழி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்கு துன்பக்கடலைக் கடப்பது கடினம்.

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை

பொருள் : கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், ஐம்புலன்களும் இருந்தும் பயன் இல்லாதவையே.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

      இறைவன் அடிசேரா தார்

பொருள் : இறைவனை வணங்கி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்கள்பிறவிக்கடலானப் பெருங்கடலை நீந்த மாட்டார்.

முப்பானூல் :

அதிகாரங்கள் :